புகையிலை பொருட்கள் விற்ற 13 கடைகளுக்கு 'சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற 13 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்பு, புகையிலை பொருள் ஒழிப்பு, உணவு கலப்படம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பயனாக கடந்த ஆண்டு ஏப்ரல் 2022 முதல் கடந்த ஆகஸ்டு வரை 1,109 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

13 கடைகளுக்கு சீல்

இதுதவிர, மாவட்டத்தில் பான்மசாலா பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பொதுமக்கள் போன்று கடைகளுக்கு சென்று வாங்குவது போல நடித்து கையும் களவுமாக பறிமுதல் செய்து வருகிறோம். இவ்வாறு மாவட்டத்தில் தொடர்ந்து நடத்திய அதிரடி சோதனையில் பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 13 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் ஓட்டல்களில் நடத்திய அதிரடி சோதனையில் அதிக வர்ணம் சேர்த்ததாகவும், அழுகிய பொருட்களை உணவு தயாரிக்க பயன்படுத்தியதாகவும் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

4 ஓட்டல்கள் மீது நடவடிக்கை

இதுதவிர, சமைத்த உணவினை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் சூடாக்கி விற்பனை செய்ததாக 4 ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உணவு விடுதிகளில் சந்தேகத்திற்குரிய உணவு பொருட்கள் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story