விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து 13 பெண்கள் காயம்


விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து 13 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து 13 பெண்கள் காயமடைந்தனர்.

விழுப்புரம்

வேன் கவிழ்ந்தது

விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தை சேர்ந்த சிலர், புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தினமும், அந்நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேனில், பில்லூரில் இருந்து திருபுவனைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பில்லூரில் இருந்து திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கூலி வேலைக்கு வேனில் புறப்பட்டனர். வேனை விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த வேன், விழுப்புரம் சாமிப்பேட்டை மெயின்ரோட்டில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

13 பெண்கள் காயம்

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அண்ணாமலை மனைவி ராதிகா (வயது 33), ராஜா மனைவி பென்னரசி (36), சிவக்குமார் மனைவி கல்பனா (27), மூர்த்தி மனைவி ஜெயந்தி (42), ஆனந்தன் மனைவி வாசுகி (47), பிரபாகரன் மனைவி ஆனந்தி (41), சந்திரசேகர் மனைவி கவிதா (40), காளி மனைவி வள்ளி (33), காளிதாஸ் மனைவி கார்த்திகா (40), இளம்பருதி மனைவி சுப்புலட்சுமி (33), அமிர்தலிங்கம் மனைவி செல்வராணி (41), ராஜா மனைவி வெண்ணிலா (33), குணசேகரன் மனைவி கலைச்செல்வி (30) ஆகிய 13 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று, காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story