130 கிலோ குட்கா பறிமுதல்
130 கிலோ குட்கா பறிமுதல்
கருமத்தம்பட்டி
சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ஆம்னி வேனை சோதனையிட்டனர். அதில், மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த ஆம்னி வேன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர், பாரதிபுரம் பகுதியில் வசிக்கும் செல்வக்குமார்(வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 130 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குட்கா, பெங்களூருவில் இருந்து கடத்தி சூலூரில் உள்ள பெட்டி கடைகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.