1,300 டன் ரேஷன் அரிசி வந்தது


1,300 டன் ரேஷன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 27 April 2023 6:45 PM GMT (Updated: 27 April 2023 6:46 PM GMT)

ஆந்திராவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,300 டன் ரேஷன் அரிசி வந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் சீனி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளுக்கான அரிசி ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், தஞ்சை, திருவாரூர் போன்ற வடமாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து 1,300 டன் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயிலின் 21 வேகன்கள் மூலம் நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயிலில் வந்த ரேஷன் அரிசி மூடைகள் லாரிகள் மூலம் நாகர்கோவில் கோணம், ஆரல்வாய்மொழி, உடையார்விளை உள்ளிட்ட 6 குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குடோன்களில் இருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Next Story