1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சைக்கு வந்தது


1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சைக்கு வந்தது
x

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் 1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சைக்கு வந்தது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும்.

இந்த ஆண்டும் வழக்கம்போல் கடந்த மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தியும், ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

1,300 டன் உரம்

இதற்கு தேவையான உரம் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,300 டன் டி.ஏ.பி. உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

பின்னர் இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.


Next Story