நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.38 லட்சம் டன் நெல் கொள்முதல்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.38 லட்சம் டன் நெல் கொள்முதல்
x

திருவண்ணாமலை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த பருவ மழை காலத்தில் போதிய அளவு மழை பெய்ததால் நடப்பு ஆண்டில் 3 போகமும் நெல் சாகுபடி நடந்தது.

இதனையொட்டி மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு அதிகபட்சமான இடங்களில் விவசாயிகளின் தேவையை அறிந்து கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் 97 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் முருகேஷ் அனுமதி அளித்தார். மேலும் ஆன்லைன் மூலம் விவசாயிகள் நெல் விற்பனைக்கு முன்பதிவு செய்து முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முதல் செயல்பட தொடங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 9-ந் தேதி வரை செயல்பட்டது.

இதன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்த 31 ஆயிரத்து 774 விவசாயிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 71 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நேரடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவினை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை எதிர்வரும் சொர்ண வாரி பருவத்தில் அறிமுகப்படுத்தப்படும் விவசாயிகள் புதிய நடைமுறையை பயன்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும என கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story