மாணவர்கள், ஆசிரியை உயிரிழந்த 13-ம் ஆண்டு நினைவு தினம்
கத்தரிப்புலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவர்கள், ஆசிரியை உயிரிழந்த 13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி மாணவர்களை ஏற்றி சென்ற போது கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக நாகக்குடையான் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியை உயிரிழந்த 13-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகக்குடையான் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள நினைவு தூணில் மாணவர்கள் மற்றும் ஆசிரியையின் உறவினர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story