502 பயனாளிகளுக்கு ரூ.14 ¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 502 பயனாளிகளுக்கு ரூ.14 ¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 502 பயனாளிகளுக்கு ரூ.14 ¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
சுதந்திர தின விழா
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரதின விழா ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா முன்னிலை வைத்தார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவும் உடனிருந்தார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 502 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடியே 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 35 பேருக்கும், அரசு அலுவலர்கள் 376 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உமாமகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.