செங்கல்சூளையில் வேலை செய்த குழந்தைகள் உள்பட 14 பேர் மீட்பு


செங்கல்சூளையில் வேலை செய்த குழந்தைகள் உள்பட 14 பேர் மீட்பு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்சூளையில் வேலை செய்த குழந்தைகள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் தென் சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 14 பேர் கொத்தடிைமகளாக வேலை செய்து வருவதாக தொழிலாளர் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில், தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமார், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, குழந்தைகள்பாதுகாப்பு அலுவலகம் சமூக பணிகள் மகாலட்சுமி, சிங்கம்புணரி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வேலை செய்த 5 குழந்தைகள் உள்பட 14 பேரை மீட்டனர். மேலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆய்வின்போது மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், கிராம உதவியாளர் சோலை, சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதி, உறுப்பினர் கார்த்திகேயன் உடன் இருந்தனர்.

1 More update

Next Story