திருச்சியில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 140 பேர் கைது


திருச்சியில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 140 பேர் கைது
x

திருச்சியில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மன்னார்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி அவ்வப்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் எல்பின் மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆதிதமிழர் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஆதிதமிழர் கட்சி மாநில பொதுச்செயலாளர் விஸ்வைகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என கூறி அவர்களை கைது செய்ய முயன்றனர். இதையடுத்து சாலையில் அமர்ந்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் மொத்தம் 140 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story