புள்ளியியல் துறை பணிக்கான தேர்வை 1,415 பேர் எழுதினர்
கோவையில் புள்ளியியல் சார்நிலை பணிக்கான தேர்வை 1,415 பேர் எழுதினர்.
கோவையில் புள்ளியியல் சார்நிலை பணிக்கான தேர்வை 1,415 பேர் எழுதினர்.
புள்ளியியல் சார்நிலை பணி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என். பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று முன்தினம்நடந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கு 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் நடைபெற்றது.
இதற்காக கோவை மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வரதொடங்கினர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர்.
கண்காணிப்பு பணி
முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த் தனர். இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். குறிப் பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வில்லை.
தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங் களில் வீடியோ மூலமும் கண்காணிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு மொத்தம் 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
தேர்வு எழுதினர்
காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை என 2 கட்டமாக தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 126 மையங்களில், 35 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதினார்கள்.
கோவை மாவட்டத்தில் 2831 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1415 பேர் தேர்வு எழுதினர். 1416 பேர் தேர்வு எழுத வரவில்லை.