14-ந்தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா


14-ந்தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 14-ந் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 14-ந் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

நூற்றாண்டு விழா

ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் விழாக்குழு தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:- ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா அக்டோபர் 14-ந்தேதி நடத்தப்படுகிறது. ஏழை பங்காளர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கு, பட்டிமன்றம் மற்றும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி என காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மெய்யநாதன், சி.வி.கணேசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், வினா-விடை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்று வழங்கப்படும்.

பரிசுகள்

மாவட்ட விளையாட்டுத்துறையின் மூலம் கபடி, கையூந்து பந்து, கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப்பரிசு பாராட்டுச்சான்று வழங்கப்படும். இந்த போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விழாவில் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணா கருப்பையா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார் ஸ்ரீதரன் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story