அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 15 ஆட்டோக்கள் பறிமுதல்


அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 15 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 July 2023 9:00 PM GMT (Updated: 14 July 2023 9:00 PM GMT)

பொள்ளாச்சியில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 15 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 15 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிறப்பு தணிக்கை

பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை பெற்றோர்கள் ஆட்டோக்களில் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் ஆட்டோக்களில் விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், நிர்மலா ஆகியோர் மகாலிங்கபுரம், பல்லடம் ரோடு, கோவை ரோடு ஆகிய பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அபராதம்

இதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்றதாக ஆட்டோ, வேனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

சிறப்பு தணிக்கையில் தகுதி சான்று, ஓட்டுனர் உரிமம் இன்றி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி சென்ற 15 ஆட்டோக்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வரி, அபராதம் மூலம் ரூ.67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

இதுபோன்று ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, விதிமுறையை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story