சென்னையில் 15-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


சென்னையில் 15-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
x

சென்னையில் வரும் 15-ந்தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story