கடையம் அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது


கடையம் அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
x

கோவிந்தபேரி பீட் அடர்ந்த வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் ராஜநாகத்தை பத்திரமாக விட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிந்தபேரியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ராஜநாகம் புகுந்தது. இது பற்றி கடையம் வனச்சரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு புதரில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளம் கொண்ட ஆண் ராஜநாக பாம்பை போராடி பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பை கோவிந்தபேரி பீட் அடர்ந்த வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் பத்திரமாக விட்டனர். ஊருக்குள் ராஜநாகம் புகுந்ததால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

1 More update

Next Story