மேற்பனைக்காடு கிராமத்தில் 15 ஆடுகள் திருட்டு


மேற்பனைக்காடு கிராமத்தில் 15 ஆடுகள் திருட்டு
x

மேற்பனைக்காடு கிராமத்தில் 15 ஆடுகள் திருட்டு போனது

புதுக்கோட்டை

15 ஆடுகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 55). விவசாயியான இவர் ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரிடம் 65 ஆடுகள் உள்ளது. சம்பவத்தன்று இரவு அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடுகளை கிடையில் அடைத்து வைத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அதிகாலை மீண்டும் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிடையில் நின்ற ஆடுகள் கத்தியதால் ஆடுகளை எண்ணி பார்த்தார். அப்போது அதில் 15 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

காரில் கடத்தலா?

இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஞானசேகரன் புகார் கொடுத்தார். அதில், எனது தோட்டத்தில் 15 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் தோட்டம் வரை கார் வராததால் மோட்டார் சைக்கிளில் ஆடுகளை தூக்கிச் சென்று காரில் ஏற்றிச் சென்றிருப்பதாக தெரிகிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story