வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குரூ.15 லட்சம் கடன்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குரூ.15 லட்சம் கடன்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குரூ.15 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க, வேலைவாய்ப்பு பெற UYEGP என்ற தமிழக அரசின் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வியாபார தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயது, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட சிறப்புப்பிரிவினருக்கு 18 வயது முதல் 55 வயது இருக்க வேண்டும். www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கடன் பெற்று தொழில் தொடங்க விரும்புவோர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story