மனுநீதி நாள் முகாமில் ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாமில் ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்
x

திருப்பனங்காடு கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் சிறப்பு முகாமில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை

செய்யாறு

திருப்பனங்காடு கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் சிறப்பு முகாமில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா திருப்பனங்காடு கிராமத்தில் பில்லாந்தாங்கல், வெம்பாக்கம், திருப்பனமூர், சேலேரி ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய மனுநீதி நாள் சிறப்பு முகாம் நடந்தது.

முகாமுக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் டி.ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகள்

சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு 501 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 2 ஆயிரத்து 344 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு வழங்கி வளர்க்க வேண்டும். குழந்தைக்கு கல்வி தான் ரொம்ப முக்கியம். பெண் கல்வி முக்கியத்துவத்ைத உணர்ந்து தான் புதுமைப் பெண் திட்டம் என்ற ஒரு திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

பெண் குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கி வருகிறார். ஊக்கத்தொகை பெற்றுக் கொண்டு தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பெருமாள், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், வெம்பாக்கம் வட்ட வருவாய் ஆய்வாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் தமின், பழனி, மாவட்டக்கவுன்சிலர் தெய்வாணி, ஒன்றியக் கவுன்சிலர் வி.ஏ.ஞானவேல், தி.மு.க. நிர்வாகிகள் சங்கர், ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன், சிட்டிபாபு உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story