தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகளா? - டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்


தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகளா? -  டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம்
x

தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகளா? என்ற கேள்விக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 22-08-2022 அன்று 7 கொலைகளும், 23-08-2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள் , தனி நபர்களிடையே முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது.

2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலக்கட்டத்தில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது. ஆகவே, முந்தைய 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.






Next Story