கரூரில் மதுவிற்ற 15 பேர் கைது


கரூரில் மதுவிற்ற 15 பேர் கைது
x

கரூரில் மதுவிற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 131 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், தரகம்பட்டியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (வயது 50), கடவூரை சேர்ந்த பழனியப்பன் (40), புத்துரை சேர்ந்த பொன்னுச்சாமி (71), உடையாபட்டியை சேர்ந்த சின்னத்துரை (46), மண்மங்கலத்தை சேர்ந்த பிரியா (44), குமரமங்கலத்தை சேர்ந்த சாமிகண்ணு (44), புதுப்பாளையத்தை சேர்ந்த வீரமலை (56), மணவாடியை சேர்ந்த அழகுராஜ் (42), வெங்கமேட்டை சேர்ந்த மாணிக்கம் மலை (53), வீரராக்கியத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (57), மணவாசியை சேர்ந்த சத்யா (45), கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த மருதநாயகம் (73), மண்மங்கலத்தை சேர்ந்த வெள்ளைய தேவன் (60), பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (54), தும்பிவாடியை சேர்ந்த ரங்கநாதன் (60) ஆகிய 15 பேரை கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 131 மது பாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story