வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்


வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Sept 2023 1:15 AM IST (Updated: 15 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வெறிநாய் கடித்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார் கோவில் அருகே கொல்லங்குடி மற்றும் அழகர்சாமி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று வெறிநாய் ஒன்று பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காளையார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வெறிநாய் துரத்தும் போது ஓட முடியாததால் அவரது காலில் கடித்து குதறி உள்ளது. காளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story