பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்


பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
x

வந்தவாசி அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம் அடைந்தனர்.

மேல்மருவத்தூர் கோவிலுக்கு...

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு தனியார் பஸ்சில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ் (வயது 33) என்பவர் பஸ்சை ஓட்டினார். வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

15 பேர் காயம்

இந்த விபத்தில் டிரைவர் தினேஷ், பஸ்சில் பயணம் செய்த உஷா (40), வைடூரியம் (40), அம்பிகா (48), கிருஷ்ணம்மாள் (55), கோவிந்தம்மாள் (52), சாந்தி (54) உள்பட 15 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தினேஷ், உஷா, வைடூரியம் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story