தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி


தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி
x

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த ஜோதிடர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த ஜோதிடர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொழில் அதிபர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப் பையா (வயது 45). தொழிலதிபர். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்தது.

இந்தநிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவருமான பிரசன்னா (41) என்பவர் அறிமுகமானார்.

மாங்கல்ய பூஜை

அவர் இடம் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியதாக தெரிகிறது. அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ரூ.25 லட்சத்து 59 ஆயிரத்து 200 கொடுத்ததாக தெரிகிறது.

மேலும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது.

4 பேர் மீது வழக்கு

ஆனால் இட பிரச்சினையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்ய முயன்று உள்ளார். இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி (31), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (28), பிரகாஷ் (58) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

இது குறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story