10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதினர். 562 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதினர். 562 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத மாணவ-மாணவி உற்சாகமாக தேர்வு மையத்திற்கு வந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 69 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. இன்று (அதாவது நேற்று) நடந்த தேர்வில் 15 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 562 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. 3 மையங்களில் 242 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
பறக்கும் படை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணிக்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முறைகேடு நடப்பதை தவிர்க்க போலீசாருடன் இணைந்து பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.