10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 873 மாணவர்கள் எழுதுகின்றனர்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 873 மாணவர்கள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 873 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 873 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் முடிந்து விட்டன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வுக்காக 69 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 228 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 965 மாணவர்களும், 7 ஆயிரத்து 908 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 873 பேர் (மாற்றுத்திறனாளிகள் உள்பட) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வினா மற்றும் விடை தாள்களை கொண்டு செல்ல போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படைகள்

தேர்வையொட்டி 6 இடங்களில் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் காப்பாளர்கள், கட்டு காப்பாளர்கள், முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகள் நடப்பதை கண்காணிக்கவும் 73 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வையொட்டி தேர்வு நடக்க கூடிய அனைத்து பள்ளிகளில் அறைகளை சுத்தம் செய்து, மேஜைகளில் பதிவு எண் ஒட்டும் பணிகள் நடந்தது. மேலும் பள்ளியின் வாசல் அருகே தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.


Next Story