பா.ஜனதாவினர் 150 பேர் கைது
பா.ஜனதாவினர் 150 பேர் கைது
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்களை குறைக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் நேற்று நகராட்சி அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். ஆனால் போலீசார் போராட்டத்திற்கு தடை விதித்தனர். இந்த நிலையில் தடையை மீறி நகராட்சி அலுவலகம் முன் பா.ஜனதாவினர் திரண்டனர். அவர்கள் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 33 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story