150 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்


150 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று மோகனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பாம்பாட்டி தெருவில் மொபட்டில் சுமார் 150 கிலோ ரேஷன்அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன்அரிசி மூட்டைகளை மொபட்டுடன் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவந்தூரை சேர்ந்த ராகுல் (வயது21), முருகன் என்கிற சொர்னேஷ்வரன் (21) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.


Next Story