1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேல கருப்பு கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதாக குழித்துறையை சேர்ந்த லட்சுமணன் மற்றும் தங்கராஜ் என்பவரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூடைகளோடு சேர்த்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story