வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
தேங்காப்பட்டணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் மண்எண்ணெய்யை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1500 லிட்டர் மண்எண்ணெய்யை வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம்புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் அரசின் மானிய விலை மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிள்ளியூர் வட்ட வழங்க அதிகாரி வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ், புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு தலைமை காவலர் சுனில்ராஜ், தலைமை காவலர் ஜஸ்டின் ராஜ், ஆகியோர் அடங்கிய குழுவினர் இனயம் புத்தன்துறை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
1,500 லிட்டர் மண்எண்ணெய்
அப்போது அந்த பகுதியில் உள்ள பீட்டர் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 41 பிளாஸ்டிக் கேன்களில் 1,500 லிட்டர் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய மண்எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் 1,500 லிட்டர் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து வட்டவிளையில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மண்எண்ணெய்யை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதிக்கி வைத்திருந்தது தெரியவந்தது.