கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்க வேண்டும்


கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்க வேண்டும்
x

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்க வேண்டும்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்க வேண்டும் என விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

மாநில மாநாடு

விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநில மாநாடு நாகை அவுரித்திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கினார். மாநாட்டை நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். இதில் முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. பேசினார். மாநாட்டில், விதவை பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரத்து 500 வழங்க வேண்டும். அரசு நிதி உதவி மூலம் வீடு கட்டும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விதவை பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ே்வலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு

கோவில் இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் விதவை பெண்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் விதவை பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விதவை பெண்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விதவை பெண்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் லதா, விதவை பெண்கள் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வசந்தா நன்றி கூறினார்.


Next Story