"புதிதாக பெயர் சேர்க்க 15,187 பேர் விண்ணப்பம்" - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்


புதிதாக பெயர் சேர்க்க 15,187 பேர் விண்ணப்பம் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2023 1:29 AM GMT (Updated: 4 Nov 2023 1:31 AM GMT)

வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்க்க இதுவரை 5 பேர் விண்ணப்பித்துள்ளதாக சத்யபிரதா சாகு கூறினார் .

சென்னை,

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்த அவர், அக்டோபர் 27ம் தேதி முதல், நவம்பர் 2ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 15 ஆயிரத்து187 பேர் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்க்க இதுவரை 5 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறினார். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய ஆயிரத்து 914 பேரும், திருத்தம் செய்ய 19 ஆயிரத்து 36 பேரும் விண்ணப்பித்துள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.


Next Story