தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்..!


தமிழ்நாட்டில் 16 இடங்களில் சதம் அடித்த வெயில்..!
x

தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக் கும். அதற்கு முன்னதாக ஜனவரி முதல் மார்ச் வரையில் ஓரளவுக்கு மட்டுமே வெயில் நிலவும். ஆனால் இப்போதே அதிக வெயில் சுட்டெரிக்கிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் இனறு 16 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை (மீனம்பாக்கம்) 39.7 -103.46

சென்னை (நுங்கம்பாக்கம்) 38.1 -100.58

தர்மபுரி 38.5 -101.3

கடலூர் 38.4 -101.12

ஈரோடு 41.0 -105.8

கரூர் பரமத்தி 40.5 -104.9

மதுரை நகரம் 39.8 -103.64

மதுரை (விமான நிலையம்) 40.8 -105.44

நாகப்பட்டினம் 38.4 -101.12

சேலம் 39.5 -103.1

தஞ்சாவூர் 39.0 -102.2

திருச்சி 40.3 -104.54

திருப்பத்தூர் 38.8 -101.84

திருத்தணி 39.6-103.28

வேலூர் 40.4 -104.72

பாளையங்கோட்டை 38.7 -101.66

மேலும் புதுச்சேரியில் முதல் முறையாக இன்று 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.


Next Story