தமிழகத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Dec 2022 10:24 PM IST (Updated: 1 Dec 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், இன்றைய பாதிப்பு 15 ஆக குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆண்கள், 9 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 2 பேர் உள்பட மொத்தம் 13 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அரியலூர், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து இன்று 35 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 178 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story