16 ஆயிரம் கி.மீ. வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்த பெண் விமானிகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு


16 ஆயிரம் கி.மீ. வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்த பெண் விமானிகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு
x

16 ஆயிரம் கி.மீ. வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்த பெண் விமானிகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ முதல் இந்தியாவின் பெங்களூரு வரையுள்ள வழித்தடம் தான் உலகின் மிக நீளமான விமான வழித்தடம். பனிபடர்ந்த வடதுருவத்தை உள்ளடக்கிய, 16 ஆயிரம் கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது பெண் விமானிகள் குழு.

இந்த குழுவின் கேப்டனான இந்திய பெண் விமானி ஜோயா அகர்வாலுக்கு, அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. வியத்தகு சாதனைபுரிந்த ஜோயாவை மக்கள் நீதி மய்யம் மனதாரப் பாராட்டுகிறது.

மொட்டை மாடியில் அமர்ந்து, வானத்தை பார்த்து கனவு கண்டுகொண்டிருப்போர் மத்தியில், பாரெங்கும் பறந்து, பாரதத்தின் புகழை பரப்பும் இவரைப்போல, இன்னும் ஏராளமான இந்திய பெண்கள் சாதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story