கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

புளியரையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவுக்கு சரக்கு ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் லாரியில் மொத்தம் 330 மூட்டைகளில் 16 டன் ரேஷன் அரிசி இருந்ததும், அவற்ைற கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரியை ரேஷன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரியை ஓட்டி வந்த நெல்லை சங்கர்நகரை சேர்ந்த பொன்ராஜ் (வயது 32), சேதுராமலிங்கம் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அரிசி மூட்டைகளுடன் லாரியையும், கைதான 2 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story