செம்மர கடத்தலில் 17 பேர் கைது


செம்மர கடத்தலில் 17 பேர் கைது
x
சேலம்

ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலத்தை சேர்ந்தவர்கள்

ஆந்திர மாநிலம் பாலப்பள்ளி வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி கடத்திய தமிழகத்தை சேர்ந்த 48 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1,588 கிலோ செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஆவர். குறிப்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கரியகோவில், கருமந்துறை, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பழனி, ராஜேந்திரன், மணி, கனகராஜ், ஆண்டி, காமராஜ், முருகேசன், பழனிசாமி, அண்ணாமலை, ஆண்டி, ஆறுமுகம், சின்ன பையன், மாணிக்கம், முருகேசன், செந்தில், வெங்கடேசன் விஜயகுமார் ஆகியோர் ஆவர். இவர்கள் சித்தூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை

செம்மரம் வெட்டுவதற்கு சேலத்தை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து சென்ற புரோக்கர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைதான தகவல் கிடைத்ததும் மலைக்கிராமங்களில் இருந்து அவர்களது உறவினர்கள் ஆந்திரா சென்றுள்ளனர். அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story