175 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


175 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 May 2023 10:00 PM GMT (Updated: 27 May 2023 9:16 AM GMT)

175 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக வந்த தகவலை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்தி தலைமையில் தனிப்படை போலீசார் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை கண்காணித்தனர். ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் அந்த கார் நிறுத்தப்பட்டது. பின்னர் காரில் இருந்து 2 பேர் இறங்கி மற்றொரு காருக்கு பார்சல்களை மாற்றம் செய்து கொண்டிருந்தனர்.

போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். அப்போது காரில் வந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து காரில் இருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெங்களூருவில் இருந்து கலிங்கப்பட்டிக்கு 175 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும், பெங்களூருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 50), பி.டி.ஆர். நகரை சேர்ந்த கார் டிரைவர் நவநீத கிருஷ்ணன் (28), கலிங்கப்பட்டியைச் சேர்ந்த இசக்கி முத்து (31) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ராமச்சந்திரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் காரில் கடத்தி வந்த 175 கிலோ புகையிலை பொருட்களை வடக்கு போலீசார் பறிமுதல் செய்ததுடன் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story