குமரியில் மெகா முகாம்:ஒரே நாளில் 17,668 பேருக்கு தடுப்பூசி
குமரியில் மெகா முகாம்:ஒரே நாளில் 17,668 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரியில் மெகா முகாமில் ஒரே நாளில் 17,668 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி, 2-வது தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. அதேபோல் மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 1,440 இடங்களில் 360 மருத்துவக் குழுவினர் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். இதில் 17 ஆயிரத்து 668 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story