கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை


கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் தொடர்பான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
x

18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை,

கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்த மீனவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தொடர்பாக 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை வள்ளியூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இருந்து சுப.உதயகுமார் புஷ்பராயன், சேசுராஜன் உள்ளிட்ட 3 பேரை வள்ளியூர் கோர்ட்டு விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்த நிலையில், மீதம் உள்ள 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



Next Story