புதுமை பெண் திட்டத்தின் கீழ் 1,860 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை -அமைச்சர் மூர்த்தி வழங்கினார்


புதுமை பெண் திட்டத்தின் கீழ் 1,860 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை -அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
x

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 1,860 மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரை

புதுமை பெண் திட்டத்தின் கீழ் 1,860 மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சர் மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

பெயர் மாற்றம்

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, "புதுமைப்பெண் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000-ம், உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து விண்ணப்பிக்கும் தகுதியான மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

வங்கி கணக்கு

இந்த திட்டத்தின் 2-ம் கட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் லேடி டோக் கல்லூரியில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான விழா நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி முன்னிலை வகித்தார். பூமிநாதன் எம்.எல்.ஏ., கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அணில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 1,860 மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி கணக்குப் புத்தகம், ஏ.டி.எம். அட்டை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்த விழாவில் லேடி டோக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டினா சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story