தமிழக சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை


தமிழக சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 15 Aug 2023 3:40 PM IST (Updated: 15 Aug 2023 3:52 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 66 சதவீதம் தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புழல் சிறையில் இருந்து 10 பேர், கடலூர் 4 பேர், திருச்சி 3 பேர், வேலூர் சிறையில் இருந்து 2 பேர் என மொத்தம் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Next Story