1,900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் வந்தது


1,900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் வந்தது
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 6:46 PM GMT)

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் வந்தது. அவை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம்:

இந்திய தேர்தல் ஆணையத்தினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு 1,000 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), 900 கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்) என 1,900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த எந்திரங்கள், பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டு அவை வாகனங்களின் மூலம் விழுப்புரம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரங்களை, விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் பழனி மேற்பார்வையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது.

சேமிப்பு கிடங்கில் இருப்பு வைப்பு

பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அங்குள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த எந்திரங்களை ஸ்கேனிங் செய்திடும் பணிகள் நடந்தது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டார்.

அப்போது விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கோவர்தனன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Next Story