திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு


திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு
x

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

ஆவடி காமராஜர்நகர் பிரதான சாலையில் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மினிவேன் டிரைவராக ராமலிங்கம் (வயது 27) மற்றும் லோடுமேன்கள் குமார் (28), ஆனந்த் (வயது 45) ஆகிய 3 பேரும் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமலிங்கம் மினிவேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருநின்றவூர் சென்றார். அவருடன் லோடு மேன்கள் குமார், ஆனந்த் ஆகிய இருவரும் சென்றனர். பின்னர் திருநின்றவூர்-பெரியபாளையம் சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வினியோகம் செய்து விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு வாகனத்தில் உள்ளே வைத்த நிலையில், ஏற்கனவே வைத்திருந்த ரூ.1.92 லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story