ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் 196 பேர் கைது


ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் 196 பேர் கைது
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

ஒண்டிப்புதூர் அருகே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 196 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்


ஒண்டிப்புதூர் அருகே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 196 பேரை போலீசார் கைது செய்தனர்.


ரெயில்வே மேம்பாலம்


கோவை ஒண்டிப்புதூரில் இருந்து இருகூர் செல்லும் சாலை உள் ளது. இந்த சாலையில் ராமச்சந்திரா நாயுடு வீதி அருகே தண்ட வாளம் குறுக்கிடுவதால் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. ரெயில் வரும்போது இந்த கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.


எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. இதையடுத்து அங்கு ரூ.25 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது

. அதைத்தொடர்ந்து மேம்பாலம் அமைக்க அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பொதுமக்கள் திரண்டனர்


இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் அங்கு மேம்பாலம் அமைக்கப்படாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்கள் திருச்சி சாலை செல்ல மாற்றுப் பாதை அமைத்து கொடுக்கப்பட்டது.

அத்துடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த நிலையில் ராமச்சந்திரா நாயுடு வீதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ரெயில்வே கேட் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


196 பேர் கைது


ஆனால் நேற்று காலையில் சூர்யா நகர், கண்ணன் நகர், செந்தில் நகர், சிவலிங்கபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திட்டமிட்டபடி திரண்டனர்.

அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் ரெயில் மறியலில் ஈடுபட ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்துக்கு செல்ல முயன்றனர்.


உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 196 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


4 கி.மீ. தூரம் சுற்று


இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு ஒரு கி.மீ. தூரம்தான் உள்ளது. ஆனால் மாற்றுப்பாதை வழியாக சென்றால் திருச்சி சாலையை அடைய 4 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நேர விரயம், எரிபொருள் செலவு அதிகரிக்கிறது.

எனவே ராமச்சந்திரா நாயுடு வீதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.



Next Story