1,983 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,983 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் ஜானகிபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒருவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தியபோது அந்த வீட்டினுள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1,983 பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவற்றை அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன்அலி (வயது 48) என்பவர் பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பக்ருதீன்அலியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1,983 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஹபிப்ரகுமான் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.