விவசாயியை தாக்கிய கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது
விவசாயியை தாக்கிய கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயசந்திரன் (வயது 53). விவசாயி. இவர் ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் புங்கவாடி புதூரை சேர்ந்த இளவரசன் (35), ராஜ்குமார் (41) ஆகியோர் தனது நிலத்தின் மீது தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொய் புகார்களை அனுப்பி அதன் மூலம் பணம் பெற முயன்றனர்.
அப்போது எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ராஜ்குமார், இளவரசன் ஆகியோர் சேர்ந்து என்னை தாக்கினர். இதில் காயம் அடைந்த நான் சிகிச்சை பெற்றேன். எனவே என்னை தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின்பேரில் ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து இளவரசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இதில் இளவரசன் வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.