வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது


வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது
x

ஓசூரில், கஞ்சா பதுக்கிய வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தன் குமார் (வயது 22), சத்ருகன் குமார் (25). நண்பர்களான இவர்கள், ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியிலேயே வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்தநிலையில் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இவர்கள், அங்கிருந்து ஓசூருக்கு கஞ்சா வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் அவர்களுடைய அறையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 4½ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சந்தன்குமார், சத்ருகன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story