கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

பள்ளிபாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி நுழைவு பாலம் அருகே பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர். சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 26) என்பதும் அதேபகுதியை சேர்ந்த மற்றொருவர் நீலகண்டன் (30) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story