நாமக்கல்லில் வாகன சோதனை: கொள்ளையர்கள் 2 பேர் கைது
நாமக்கல்லில் வாகன சோதனையில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. இதையடுத்து காரையும், மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருச்சியை சேர்ந்த பிரபல கொள்ளையர்களான ராஜ்கமல் (வயது 34) மற்றொருவர் பாலகுமார் (24) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், நாமக்கல்லில் ஒருசில இடங்களில் திருட முயற்சி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story