ஒருவரை ஒருவர் தாக்குதல் - 2 பேர் கைது


ஒருவரை ஒருவர் தாக்குதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2023 10:45 PM IST (Updated: 26 Jun 2023 1:11 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 38). இவர் அதே பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரிடம் மாத சீட்டு பணம் கட்டி முடித்துள்ளார்.

இந்தநிலையில் மாதவன் சீட்டு பணத்தை சீனிவாசனிடம் நேற்று இரவு கேட்கும்போது அதே தெருவில் வசிக்கும் முனியாண்டி மகன் மோகன்ராஜ் என்பவர் மாதவனை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாதவன் மற்றும் மோகன்ராஜி இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் மாதவன், மோகன்ராஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story